Honda Shine 100 vs Rivals : ஹோண்டா ஷைன் 100 Vs போட்டியாளர்கள் ஒப்பீடு – சிறந்த பைக் எது ?

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக வந்துள்ள ஹோண்டா ஷைன் 100 மாடலின் விலை மற்றும் வசதிகளுடன் ஒப்பீடு செய்து அனைத்து முக்கிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம். இதுதவிர, ஹீரோ HF 100, HF டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

100-சிசி இரு சக்கர வாகனப் பிரிவில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகிய மாடல்கள் பல காலமாக உள்ளன. முதன்முறையாக 100சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹோண்டா தனது முதல் மாடலை வெளியிட்டுள்ளது.

Honda Shine 100 Vs Rivals

நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 100சிசி சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டிருக்கும் நிலையில் இதற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷைன் 100 மாடலில் புதிய 99.7 சிசி PGM-Fi ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7.5 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்று சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய போட்டியாளரான ஹீரோ HF 100 நாட்டின் விலை குறைந்த இரு சக்கர வாகனமாக உள்ளது. இந்த மாடலின் விலை தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் ரூ. 54,768 ஆக உள்ளது. குறிப்பாக இந்த மாடல் கிக் ஸ்டார்டர் மட்டுமே பெற்றதாக அமைந்துள்ளது.

பொதுவாக ஹீரோ நிறுவன ஸ்ப்ளெண்டர் பிளஸ், எச்எஃப் 100 மற்றும் எச்எஃப் டீலக்ஸ் என மூன்று மாடல்களில் மிகவும் நம்பகமான 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த மிக முக்கிய போட்டியாளரான பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 100 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக பவர்  7.9 bhp at 7,500 rpm மற்றும் 8.34 Nm at 5,500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Specs Honda Shine 100 Hero Splendor + Hero HF 100 Hero HF Deluxe Bajaj Platina
என்ஜின் 99.7cc 97.2cc 97.2cc 97.2cc 102cc
அதிகபட்ச பவர் 7.5 bhp 7.91 bhp at 8,000 rpm 7.91 bhp at 8,000 rpm 7.91 bhp at 8,000 rpm 7.9 bhp at 8,000 rpm
அதிகபட்ச டார்க் 8.05 Nm 8.05 Nm at 6000 rpm 8.05 Nm at 6000 rpm 8.05 Nm at 6000 rpm 8.34 Nm at 5500 rpm
கியர்பாக்ஸ் 4 ஸ்பீடு 4 ஸ்பீடு 4 ஸ்பீடு 4 ஸ்பீடு 4 ஸ்பீடு
பிரேக் டிரம் (இரு பக்கமும்) டிரம் (இரு பக்கமும்) டிரம் (இரு பக்கமும்) டிரம் (இரு பக்கமும்) டிரம் (இரு பக்கமும்)
விலை ₹ 64,900 ₹ 72,226 – ₹ 74,326 ₹ 54,768 ₹ 60,088 – ₹ 67,938 ₹ 67,814
Honda Shine 100 Vs Hero Splendor+ Vs Hero HF 100 Vs Hero HF deluxe Vs Bajaj Platina

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.