கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி பீட் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட சொக்கம்பட்டி பீட் மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை வெயிலால் நேற்றுமுன்தினம் இரவில் தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் சென்று பார்வையிட்டனர்.
அப்போது அங்கு காய்ந்து கிடந்த இலை சருகுகளில் தீப்பற்றி எரிந்து மளமளவென பரவியது. இதையடுத்து 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், செடிகொடிகளால் அடித்து தீயை போராடி அணைத்தனர்.