திருச்சியில் யார் அதிகாரமிக்கவர் என்ற போட்டியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவிற்கும் இடையே மோதல் இடையேயான மோதல் முற்றி அடிதடி, ரவுடிசம் வரை நீண்டுள்ளது.
இந்நிலையில், கே.என்.நேருவுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டியாதல், ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடுமீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
திருச்சி சிவா வீட்டை காவல்துறையை வைத்துக்கொண்டே தாக்குதல் நடத்தும் திமுக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் இதுதான் திராவிட மாடலா ?#திராவிட_மாடல் இது தான் டா திமுக இன்று மாலையில் 4 பேர் சஸ்பெண்ட் & காவல் நிலையத்தில் சரண் பிரச்சினை ஓவர்…#திருட்டுதிமுக #திராவிட_மாடல் pic.twitter.com/6f63T3tm6K
— Manimaran (@kmani2011) March 15, 2023
இந்த சம்பவம் குறித்து அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவின் 4 நிர்வாகிகளை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்துச் செல்வம், துரைராஜ், ராமதாஸ் ஆகிய நால்வரும் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.