இந்தியாவின் தலைநகரில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண சுவிட்சர்லாந்து உதவி…


இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நிலவும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண சுவிஸ் ஆய்வாளர்கள் உதவியுள்ளார்கள்.

இந்திய தலைநகரில் காணப்படும் புகைப்பனி 

இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில், இரவு நேரங்களில் smog எனப்படும் புகைப்பனி அதிக அளவில் காணப்படுகிறது.

அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய சுவிட்சர்லாந்தின் Paul Scherrer Institute (PSI) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர்களும், இந்தியாவின் Indian Institute of Technology Kanpur ஆய்வாளர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். 

இந்தியாவின் தலைநகரில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண சுவிட்சர்லாந்து உதவி... | Switzerland Helps India

Keystone / Rajat Gupta

ஆய்வு முடிவுகள்

ஆய்வின் முடிவுகள், புதுடில்லியில் காணப்படும் இந்த புகைப்பனிக்கான காரணத்தை விளக்கியுள்ளன.

அதாவது, சமைப்பதற்காகவும், குளிரிலிருந்து காத்துக்கொள்வதற்காகவும் மக்கள் விறகுகளைப் பயன்படுத்துவதே இந்த புகைப்பனிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த புகையிலுள்ள சில வாயு மூலக்கூறுகள் சில மணி நேரத்திற்குள் இறுகிக் கடினமாகி துகள்களாக மாறுகின்றன, அவை இணைந்து சாம்பல் நிற ஆவியை உருவாக்குகின்றன என அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.