வாஷிங்டன் : இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக, எரிக் கார்செட்டியை நியமிக்க, 52, அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார்செட்டியை, 2021ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்தார். பல்வேறு காரணங்களால் இவரது பெயர் நிராகரிக்கப்பட்டு வந்த சூழலில், மீண்டும் எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த பரிந்துரைக்கு, அரசு அதிகாரங்களில் வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவு எடுக்கும் செனட் குழு ஒப்புதல் அவசியம் என்பதால், இதற்கான ஓட்டுப் பதிவு நடந்தது. அப்போது, கார்செட்டியின் நியமனத்துக்கு ஆதரவாக, 138 ஓட்டுகள் பதிவாகின. இதையடுத்து, செனட் சபையின் முழு ஓட்டெடுப்புக்கு எரிக் கார்செட்டியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஏரிக் கார்செட்டி இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரான எரிக் கார்செட்டி, 52, அமெரிக்காவின் 100 ஆண்டு கால வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றவர். ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர், மேயர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement