புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் என்.ஜி.ஓ. எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.55,449 கோடி வெளிநாட்டு நிதி பெற்றுள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டத்தில் கீழ் பதிவு செய்து செயல்படுகின்றன.
இந்நிலையில் பாராளுமன்ற ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்,
இந்தியாவில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ.க்கள் கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.16 ஆயிரத்து 306 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 17 ஆயிரத்து 058 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 22 ஆயிரத்து 085 கோடி என மொத்தம் ரூ. 55 ஆயிரத்து449 கோடி வெளிநாட்டு நிதி பெற்றுள்ளன.
இதில் அதிகபட்சமாக டில்லியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ரூ. 13 ஆயிரத்து 957 கோடியும், தமிழ்நாடு ரூ. 6 ஆயிரத்து 803 கோடியும், கர்நாடகா 7,224 கோடியும், மஹாராஷ்டிரா ரூ.5.555 கோடியும் வெளிநாட்டு நிதி பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement