முட்டை, கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ கறிக்கோழி ரூ.82க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு கிலோ கறிக்கோழி விலை கிலோ ரூ.89 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.