திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது இளைஞர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக சில திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் இருக்கும் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு திருநங்கை குழுவுடன் இவர் வாட்ஸாப்பில் தொடர்பில் இருந்துள்ளார்.
அந்த இளைஞருக்கும் திருநங்கை ஆக வேண்டுமென்ற எண்ணம் இருந்து நிலையில், அவரிடம் ஆசை வார்த்தைகளை பேசிய அந்த கும்பல் சூலூர் பகுதிக்கு அழைத்துள்ளது. இதனை தொடர்ந்து, சூலூருக்கு வந்த அந்த இளைஞரிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை பிடுங்கிக் கொண்டு பெண்கள் அணிகின்ற ஆடைகளை அணிவித்து சாலைகளில் இரவு நேரங்களில் நிற்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த இளைஞரை எங்கும் செல்ல விடாமல் அந்த கும்பல் தடுத்ததால் அவர் எப்படியோ தனது தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விஷயம் போலீசின் காதுகளுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து அந்த திருநங்கை கும்பலை பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த இரண்டு சவரன் தங்க நகை உள்ளிட்டவற்றை கைப்பற்றி இளைஞரை மீட்டு அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.