அணுமின் நிலையங்களை 3 மடங்கு அதிகரிக்க இலக்கு

ஒன்றிய அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கேள்வி நேரத்தில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: அணுமின் நிலையங்கள் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தியால் ஒவ்வொரு ஆண்டும் 41 மில்லியன் டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 3 சதவீதத்தை அணுமின் நிலையங்கள் கொண்டுள்ளன.  2032ம் ஆண்டுக்குள் அணுமின் நிலையங்களின் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2031ம் ஆண்டில் அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 22,480 மெகாவாட்டாக அதிகரிக்கும். இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள், கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு அணு உலை, கரக்பூர் மற்றும் ராஜஸ்தானில் தலா 700 மெகாவாட் கொண்ட 2 அணு உலைகள் கட்டி முடிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.