சீனாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா, ஈரான்: அடுத்த வாரம் தொடங்கும் பிரம்மாண்ட கூட்டு இராணுவ பயிற்சி


ரஷ்யா மற்றும் ஈரானுடன் சேர்ந்து சீனா அடுத்த வாரம் கூட்டு கடல் ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.


கூட்டு இராணுவ பயிற்சி

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவிற்கு எதிரான அரசியல் தொடர்புகளை சீனா மேற்கொண்டு வருவது அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில் அடுத்த வாரம் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடல் ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

சீனாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா, ஈரான்: அடுத்த வாரம் தொடங்கும் பிரம்மாண்ட கூட்டு இராணுவ பயிற்சி | China Joins Hands With Russia Iran Joint Exercises Xinhua

மேலும் இந்த பாதுகாப்பு பிணைப்பு-2023 கடற்பயிற்சியில் வேறு சில நாடுகளும் இணைய உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாடுகளின் ஒத்துழைப்பு ஆழப்படும்

இந்த கடல் ராணுவ பயிற்சியானது, ஈரான், பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் கடற்கரையை உள்ளடக்கிய பெர்சியன் வளைகுடா முகப்பு பகுதியில் நடைபெறுகிறது.

சீனாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா, ஈரான்: அடுத்த வாரம் தொடங்கும் பிரம்மாண்ட கூட்டு இராணுவ பயிற்சி | China Joins Hands With Russia Iran Joint ExercisesAFP VIA GETTY IMAGES

அத்துடன் இந்த ராணுவ பயிற்சியின் மூலம் நட்பு நாடுகளின் நடைமுறை ஒத்துழைப்பு ஆழப்படும் மற்றும் மண்டல அமைதி மற்றும் ஸ்திர தன்மைக்கு ஏற்ற நேர்மறையான ஆற்றலையும் வழங்கும் என சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது போன்ற ராணுவ பயிற்சி கடந்த 2019ம் ஆண்டிலும் நடைபெற்றது, அதிலும் இந்த மூன்று நாடுகளும் பங்கேற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.