ஹிண்டன் பர்க் நிறுவனம் வெளியிட்ட அதானி முறைகேடு தொடர்பான தகவல்களால் அதானி குழும பங்குகள் அகல பாதாளத்திற்கு சென்றது. இதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனம் இழந்தது. இது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக கட்சியினர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியவர் இந்த சூழலில் பிரதமர் வெளிநாடு சென்றால் அதானிக்கு புதிய தொழிலுக்கான ஒப்பந்தம் கிடைக்கிறது.
இதுதான் இந்தியாவின் வெளியுறவு கொள்கையா? என பதிவிட்ட ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அதானியை பலப்படுத்துவது தான் இந்திய வெளியுறவு கொள்கையா என்று கேட்டுள்ளார்.