பிரித்தானியாவில் அதிகமாக புழக்கத்தில் இருந்த 20 இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் மாற்று மருந்து என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இருமலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்
குறித்த இருமல் மருந்துகளால் கடுமையான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, இருமல் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஃபோல்கோடினைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்கள் இருமலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை பிரபல மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் பகிர்ந்துள்ளார்.
பிரித்தானியாவில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் Day & Night Nurse மற்றும் Covonia உட்பட சுமார் 20 வகை இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் தெரிவிக்கையில்,
தேனுடன் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானம் பருகினால் இருமலை கட்டுப்படுத்தலாம். நீராவி சிகிச்சை, தொண்டை வலிக்கான மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன என்றார்.
தற்போதும் தங்கள் வீடுகளில் இந்த தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் எஞ்சியிருக்குமாயின், கண்டிப்பாக இது குறித்து தங்கள் மருத்துவர் அல்லது மருந்தகத்தில் ஆலோசனைகளை பெறலாம் என மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
தேனுடன் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானம், தொண்டை வலிக்கான மாத்திரைகள் அல்லது நீராவி சிகிச்சை உள்ளிட்டவை பாதுகாப்பானவை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
70 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பது
சூடான எலுமிச்சை பானம் மற்றும் தேன் இருமல் மற்றும் சளி போன்ற தொல்லைகளில் இருந்து எளிதாக விடுபட உதவுகிறது, ஏனெனில் சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி உள்ளது மற்றும் சளியை கட்டுப்படுத்த உதவுகிறது, தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இதை ஒன்றாக கலந்து பருகுவதால், இருமல் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என மருத்துவர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என அஞ்சும் Pholcodine என்பது கடந்த 70 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பது தான் என்கிறார் மருத்துவர் ஜோன்ஸ்.
இது பொதுவான ஒரு உட்பொருள். ஆனால் பாதுகாப்பு என்று வருபோதும் நாம் சிக்கலை தவிர்ப்பது தான் நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.