முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடாவுக்கான இலங்கை
பிரதிநிதியாகக் கனடாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஆனந்தம்
இரத்தினகுமார் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்றைய தினம் (15.03.2023) மேற்படி விசேட நியமனம்
வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு
இராஜாங்க அமைச்சர் திலும். எஸ். அமுனுகம வழங்கி வைத்துள்ளார்.
மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார்,
தனது நியமனத்தினூடாக தான் செயலப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடக
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.