புதுடில்லி: ஆதார் தகவல்களை ஜூன் 14 வரை இணையதளம் மூலம், கட்டணமின்றி புதுப்பித்து கொள்ளலாம் என யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் தங்கள் ஆதார் தகவல்களை இலவசமாக ஆதார் இணையதள பக்கத்தின் மூலம் மார்ச் 15 முதல் ஜூன் 14- வரை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கமான கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்வதற்கு வழக்கத்தில் உள்ள கட்டணம் பொருந்தும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement