மும்பை, தாயின் உடலை வீட்டின் கழிப்பறையில், இரும்பு தொட்டியில் மறைத்து வைத்ததாக, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் லால்பாக் பகுதியைச் சேர்ந்தவர், வீணா ஜெயின். இவர் தன் மகளுடன் வசித்து வந்தார்.
இவருக்கு அவருடைய சகோதரர்கள் பண உதவி செய்து வந்தனர். கடந்த நவம்பரில் இருந்து சகோதரியை காணவில்லை என, சகோதரர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், வீணா ஜெயினின் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
வீட்டின் கழிப்பறையில் உள்ள இரும்பு தொட்டியில், ஒரு இரும்பு பெட்டியில், வீணா ஜெயினின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் எந்தவொரு துர்நாற்றமும் வரவில்லை. ஒரு பிளாஸ்டிக் பையில் உடலை வைத்து, அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வீணா ஜெயினின் மகள் ரிம்பிள் ஜெயினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்துஉள்ளனர்.
தாய் வீணா ஜெயினை அவர் கொலை செய்தாரா அல்லது உயிரிழந்த தாயின் உடலை மறைத்து வைத்திருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement