மருமகளைக் கொன்று குப்பை மேட்டில் வீசிய நபர் : கமெராவில் பதிவான இறுதி தருணங்கள்


இளம்பெண் ஒருவருக்கு அவருடைய குடும்பத்தார் 16 வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்துவைக்க விரும்பிய நிலையில், அவர் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால், அவரை கொடூரமாக கொலை செய்தார் அவரது உறவினர் ஒருவர்.

கௌரவக் கொலை

கௌரவக் கொலை என கருதப்படும் இந்த சம்பவத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெயர் சோமையா பேகம் (Somaiya Begum, 20).

Bradfordஇல் வாழ்ந்துவந்த சோமையா கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான Mohammed Taroos Khan (53) என்பவருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மருமகளைக் கொன்று குப்பை மேட்டில் வீசிய நபர் : கமெராவில் பதிவான இறுதி தருணங்கள் | Man Who Killed Daughter In Law

Credit: Ben Lack

வெளியாகியுள்ள CCTV காட்சிகள்

இந்நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன் சோமையா நடமாடும் கடைசி தருணங்கள் அடங்கிய CCTV கமெரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், சோமையாவின் உறவினரான முகமது, ஒரு காரிலிருந்து பிளாஸ்டிக் கவர் ஒன்றை இறக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அவை குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அது குப்பை எனக் கூறியுள்ளார் முகமது.ஆனால், முகமது குப்பை என கூறும் விடயம் உண்மையில் சோமையா என்றார் அரசு தரப்பு வழக்கறிஞரான Jason Pitter.

மருமகளைக் கொன்று குப்பை மேட்டில் வீசிய நபர் : கமெராவில் பதிவான இறுதி தருணங்கள் | Man Who Killed Daughter In Law
Credit: PA

முகமது, சோமையாவை கொடூரமாகக் குத்திக் கொன்றதுடன், அவரது உடலை குப்பை மேடு ஒன்றில் வீசிவிட்டார்.
சோமையாவின் உடல், அழுகிய நிலையில், புழுக்கள் அரிக்க கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.