இராணுவத்தின் கொமாண்டோ படையணியில் நடைபெற்ற ஒரு விழாவின் போது அவர்களின் புதிய 265 ‘கபில தொப்பிகள்’ மற்றும் 85 ‘நீண்ட இலக்கு ரோந்து ‘ வீரர்களின் விடுகை அணிவகுப்பு புதன்கிழமை (மார்ச் 15) குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த கௌரவமான நிகழ்வில் 4 அதிகாரிகள் மற்றும் 261 சிப்பாய்களைக் கொண்ட இல. 51 ஏ, பி, சி மற்றும் டி குழுவினர் கலந்து கொண்டனர்.
கொமாண்டோ படையணியின் ‘நீண்ட இலக்கு ரோந்து’ பாடநெறி இல – 17 இன் 5 அதிகாரிகள் மற்றும் 80 சிப்பாய்கள் பல படைவீரர்கள் மற்றும் பயிற்றுனர்களின் பயிற்சியின் கீழ் அவர்களின் தொடர்ச்சியான மற்றும் விதிவிலக்கான பயிற்சியின் பின்னர் இறுதியாக அவர்களின் அற்புதமான மற்றும் தனித்துவமான திறன்கள் மற்றும் செயல்பாட்டு நுட்பங்களை வெளிப்படுத்தினர். இப்பாடநெறியின் பின்னர் அவர்களால் முன்னோடியில்லாத அச்சுறுத்தல்கள் அல்லது சவால்களை எதிர்கொள்ள முடியும்.
சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் முன்னிலையில் அன்றைய விரிவான விழா ஆரம்பமாகியது. அன்றைய பிரதம அதிதியான இராணுவத் தளபதி, அந்த இடத்திற்கு வருகை தந்த வேளை கொமாண்டோ படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
கொமாண்டோ கொம்பனி பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கேகே தர்மவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, கொமாண்டோ படையணியின் நிலையத் தளபதி கேணல் யூஎஸ்பி ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, ஆகியோரினால் வரவேற்கப்பட்டதுடன், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதையும் வழங்கப்பட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, பிரதம அதிதி அணிவகுப்புத் தளபதியால் அன்றைய அணிவகுப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் விடுகை அணிவகுப்பில் மரியாதையைப் பெறுவதற்கும் அழைக்கப்பட்டார்.
அணிவகுப்புக்குப் பிறகு, பெற்றோர்கள் மற்றும் விடுகை பெற்ற கொமாண்டோக்களின் உறவினர்கள் அந்த தமது துணிச்சலான மகன்களுக்கு மதிப்புமிக்க கொமாண்டோ சின்னத்தை பொருத்தினர். கொமாண்டோ படையணியின் பொன்மொழி கூறுவது போல் ‘எதுவும் சாத்தியமில்லை’ என்பதை நிரூபிப்பதற்காக கொமாண்டோக்களின் போற்றப்படும் குடும்பத்தில் சேர அனைவரும் தயாராக உள்ளனர்.
அடுத்த கணம் 18 மாத கால கொமாண்டோ பயிற்சி வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றிய இராணுவத் தளபதி, புதிதாக இணைந்த கொமாண்டோக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அன்றைய நிகழ்விற்கு நினைவுகளைச் சேர்ப்பதன் மூலம் பிரதம அதிதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள், அன்றைய தின நிகழ்வு முடிவடைவதற்கு முன்னர், குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
கொமாண்டோ படையணியின் பயிற்சி பாடசாலையில் உள்ள டிராப் சோன் பகுதியில் ‘நீண்ட இலக்கு ரோந்து’ பாடநெறியின் நிறைவு விழா இடம்பெற்றது. இந்த நாளுக்கு மேலும் முக்கியத்துவத்தை சேர்க்கும் வகையில், கொமாண்டோ படையணி தனது 43வது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து, கொமாண்டோ படையணியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சில சிறப்பு விருதுகளையும் வழங்கியது.
அன்றைய திகைப்பூட்டும் காட்சியானது, கொமாண்டோ படையணியின் பயிற்சி பாடசாலையின் வான் மண்டலத்தில் அரங்கேற்றப்பட்டது. பின்னர் பல உருவகப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் அந்த கொமாண்டோக்களின் துணிச்சலான திறமைகளை பார்வையாளர்கள் காண்பதற்கு களம் அமைக்கப்பட்டது.
ஸ்னைப்பர் ஷூட்கள், பணயக்கைதிகள், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கள், கே9 (போர் நாய்கள்) – கையாளும் காட்சிகள், பராசூட் பாய்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றன.
பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும்,முதலாம் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூசிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஎஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஆகியோர்கள் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.
கொமாண்டோ படையணியின் பயிற்சி பாடசாலையில் பயிற்சிக் கலத்தில் வெளிப்படுத்தப்பட்ட திறன்களுக்காக பாராட்டப்பட்டோர்:
கொமாண்டோ பாடநெறி – 51
சிறந்த கொமாண்டோ – இரண்டாம் லெப்டினன் எல்பீஆர் பியூமிக – 51 பி
சிறந்த உடல் தகுதி – சிப்பாய் டிஎஜிஎடி குமார – 51 சி
சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் – சிப்பாய் டபிள்யூஎடிபீ விக்கிரமாராச்சி – 51 பி
நீண்ட இலக்கு ரோந்து பாடநெறி – 17
சிறந்த நீண்ட இலக்கு ரோந்து சிப்பாய் – லெப்டினன் சிஎல் ஜயதுங்க
சிறந்த பாதை கண்டுபிடிப்பாளர் – சிப்பாய் டிஎம்ஜே குமாரசிங்க
சிறந்த நீண்ட இலக்கு ரோந்து 8 பேர் குழு – லெப்டினன் டபிள்யூஎம்எல்டி விஜேசூரிய பி 103
43வது ஆண்டு சிறப்பு விருதுகள்
சிறந்த கொமாண்டோ – கோப்ரல் எவி கல்லாகே – 4 வது கொப
கொமாண்டோ படையணியின் பெயரை உயர்த்த மிகவும் அர்ப்பணித்த படையலகு கொமாண்டோ – அதிகாரவனையற்ற அதிகாரி ஐபிஎம்ஆர்ஆர் பன்னாஹேக – 2 வது கொப
படையலகுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் – 1 வது கொப
படையலகுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் இடம் – 2 வது கொப
கொமாண்டோ படையணியின் பெயரை உயர்த்த மிகவும் அர்ப்பணித்த படையலகு – 1 வது கொப