தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பலமுகம் கொண்டவராக வலம் வருகின்றார்
உதயநிதி
. அதுமட்டுமல்லாமல் தற்போது அமைச்சராகவும் செயல்ப்பட்டு வருகின்றார். எனவே தற்போது இவர் நடித்துக்கொண்டிருக்கும் மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவிற்கு குட் பை சொல்ல போகின்றார் உதயநிதி.
மேலும் இவர் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து விலகி முழு நேர அரசியலில் இறங்கவுள்ளார் உதயநிதி. இதனை உதயநிதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
Samantha: சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா ?இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!
உதயநிதி, ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் என பலர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதையடுத்து சிறப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை பற்றிய ஒரு காட்சி கண்ணை நம்பாதே படத்தில் இடம்பெற்றுள்ளது. 75 நாளா அம்மா இருக்காங்கன்னு சொல்லி தானே நம்மை ஏமாத்துனாங்க என சதிஷ் ஒரு கட்சியில் பேசியிருப்பார். இந்த வசனம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக இது உதயநிதி நடித்த படம் என்பதால் வேண்டுமென்றே இந்த காட்சி இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சியினரை சேர்ந்த சிலர் குற்றம்ச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு இப்படத்தின் இயக்குனர் மாறன் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்த காட்சியை ஸ்பாட்டில் தான் யோசித்து வைத்தோம். வெறும் நகைச்சுவைக்காகவே தான் இந்த காட்சியை வைத்தோமே தவிர எந்த உள்நோக்கமும் கிடையாது. மேலும் இந்த காட்சி யாரையாவது புண்படுத்திருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதியின் ரசிகர்கள் சிலரோ இந்த சர்ச்சையே படத்திற்கு நல்ல விளம்பரமாக இருக்கும் என கூறுவதும் குறிப்பிடத்தக்கது.