தென்காசி: குற்றாலத்தில் தொடர் வெயில் காரணமாக அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதியிலும் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து கிட்டத்தட்ட அடியோடு நின்று விட்டது. மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
ஐந்தருவியில் பாறையை ஒட்டினாற் போன்று ஒரு பிரிவில் மட்டும் சிறிது அளவு தண்ணீர் கசிகிறது. இந்நிலையில் நேற்று மாலை தென்காசி பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து சற்று இதமான சூழல் நிலவியது. ஆனாலும் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யவில்ைல. குற்றால அருவிகளில் தண்ணீரின்றி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.