கம்போடியாவிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட 900 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த முருகப்பெருமானின் சிலை மீட்கப்பட்டு கம்போடியாவிற்கே திருப்பி கொண்டுவரப்பட்டுள்ளது.
1960-களில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பல புராதன சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன.
கம்போடிய அரசின் நடவடிக்கையால், அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பத்தாம் நூற்றாண்டில், மயில் மேல் வீற்றிருப்பதுபோல், வடிக்கப்பட்ட போர் கடவுள் முருகனின் சிலை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.