Kannai Nambathey: த்ரில்லர் கதையில் ஜெயித்தாரா உதயண்ணா.?: 'கண்ணை நம்பாதே' பட விமர்சனம்.!

உதயநிதி ‘மாமன்னன்’ படத்தை தனது கடைசி படமாக அறிவித்த நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படம் தற்போது வெளியாகிள்ளது. மு. மாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. த்ரில்லர் ஜானராக ரிலீசான இந்தப்படம் த்ரில்லர் விரும்பிகளுக்கான நல்ல தீனியாக அமைந்தது. இந்தப்படத்தை இயக்கிய மு. மாறன் தான் தற்போது ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, ஆத்மிகா, சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் உதயநிதியும், பிரசன்னாவும் ரூம்மெட்கள். ஒருநாள் இரவில் இவர்கள் ஒயின்ஷாப்பில் இருந்து வரும்போது பூமிகாவின் கார் விபத்துக்குள்ளாவதை பார்க்கின்றனர். அவருக்கு உதவி செய்ய போகும் உதயநிதி, அந்த காரை வாங்கி வருகிறார். எதிர்பாராத விதமாக அந்த காரில் பிணம் ஒன்று இருக்கிறது. அதன்பிறகு விபத்து ஒன்றும் நடக்கிறது.

ஒரே போன் கால்.. ரூ. 45 லட்சம் செலவு செய்து உயிரை காப்பாற்றிய மெஹா சூப்பர் ஸ்டார்: பொன்னம்பலம் உருக்கம்.!

காரில் இருக்கும் பிணம், விபத்துக்குள்ளான உடல் இரண்டையும் உதயநிதியும், பிரசன்னாவும் மறைக்கின்றனர். இந்த இரண்டு மரணங்களும் எதற்காக நிகழ்ந்தது. இந்த பிரச்சனையில் இருந்து இவர்கள் எவ்வாறு தப்பித்தார்கள் என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்லியுள்ளது ‘கண்ணை நம்பாதே’ படம். முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி லாஜிக் மீறல்களுடன் பல கேள்விகளை எழுப்புகிறது.

உதயநிதி எப்போதும் போல் அளவான நடிப்பை கொடுத்துள்ளார். பிரசன்னாவே ஹீரோவாக படம் முழுக்க சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஹீரோயின் ஆத்மிகாவும், சதீஷும் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘ரோஜாக்கூட்டம்’ ஸ்ரீகாந்த், பூமிகா கூட்டணி இந்தப்படத்தில் இணைந்துள்ளது. மொத்தத்தில் ‘கண்ணை நம்பாதே’ படம் த்ரில்லர் விரும்பிகளுக்கான Decent Watch லிஸ்டில் சேர்ந்துள்ளது.

Kavin: ‘டாடா’ படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு: கவினின் அடுத்த மாஸ் கூட்டணி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.