சிவகங்கை: காரைக்குடியில் ரவிச்சந்திரன் என்பவரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் T2கோடி பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். கடந்த 12ம் தேதி சென்னையிலிருந்து காரைக்குடி கழனி வாசலுக்கு வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடத்தப்பட்டார். காரில் வந்த ரவிச்சந்திரனை கடத்தி 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.2 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டதாக நாகேந்திரன், விஜயகுமார், சாமுவேல், பால்ராஜ், சதிஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.