48 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தையின் காணாமல் போன சடலத்தை போராடி மீட்ட தாய்!


பிரித்தானியாவில், தனது இறந்த குழந்தையின் உடலுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக போராடி வந்த ஒரு தாய்க்கு இப்போது நீதி கிடைத்துள்ளது.

தாயின் 48 ஆண்டுகால போராட்டம்

பிரித்தானியாவில், ஸ்காட்லாந்தின் எடின்பரோவைச் சேர்ந்த 74 வயதான லிடியா ரீட் (Lydia Reid), 48 ஆண்டுகால சட்டரீதியான போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து தனது குழந்தையின் சடலத்தையும், உடல் பாகங்களையும் போராடி பெற்றார்.

லிடியா ரீட், 1975-ல் தனது மகனின் மரணத்திற்குப் பிறகு அவரது சவப்பெட்டியில் மனித எச்சங்கள் எதுவும் காணப்படாததால் அவருக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்துள்ளார்.

48 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தையின் காணாமல் போன சடலத்தை போராடி மீட்ட தாய்! | Scotland Woman Gets Babys Body After 48 YearsBBC

தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து, 42 ஆண்டுகள் கழித்து 2017 செப்டம்பரில் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, அவரது குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் இல்லை என்பதை அவர் அறிந்தார்.  அங்கு வெறும் ஆடையும் தொப்பியும் மட்டுமே இருந்தது. சடலம் இருந்ததற்கான அடையாளமே இல்லை.

அவரது குழந்தை Gary பிறந்து ஒரு வாரத்திலேயே ரீசஸ் நோயால் (Rhesus) உயிரிழந்தது. ரீசஸ் என்பது கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் அவருடைய குழந்தையின் இரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.

48 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தையின் காணாமல் போன சடலத்தை போராடி மீட்ட தாய்! | Scotland Woman Gets Babys Body After 48 YearsBBC

ரீட் தனது மகன் இறந்து சில நாட்களுக்குப் பிறகு உடலைப் பார்க்கவேண்டுமென மருத்துவமனையில் கேட்டபோது, ​​தனக்கு வேறு குழந்தை காட்டப்பட்டதாகக் கூறினார். தனது விருப்பத்திற்கு மாறாக தனது குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்ட உடல் உறுப்புகள்

தனது மகனின் உடல் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக அகற்றப்பட்டதாக அவர் பயந்தது போலவே, சோதனைகளுக்காக தனது மகனின் உறுப்புகள் உண்மையில் அகற்றப்பட்டதைக் கண்டுபிடித்தபோது மனமுடைந்தார்.

எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உறுப்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை தாயிடம் ஒப்படைக்க கிரவுன் அலுவலகம் இப்போது அனுமதித்துள்ளது.

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எடின்பரோவில் உள்ள வெஸ்டர்ன் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரீட், கேரியின் உடலின் மற்ற பாகங்களுக்கு என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

48 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தையின் காணாமல் போன சடலத்தை போராடி மீட்ட தாய்! | Scotland Woman Gets Babys Body After 48 YearsBBC

நான் இறப்பதற்கு முன்பு அடக்கம் செய்ய முடியும்..,

“எனது மகனைத் திரும்பப் பெற நான் ஆசைப்பட்டேன், இப்போது நான் பெற்றிருக்கிறேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இப்போது நான் இறப்பதற்கு முன்பு அவரை அடக்கம் செய்ய முடியும், நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று தனது மகனின் இறுதிச் சடங்கை நடத்துவதற்காக 24 மணிநேரம் தன்னைச் சோதித்துப் பார்ப்பதாக ரீட் கூறியதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.


 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.