தஞ்சவூர் மாவட்டம் சாலிமங்கலம் அடுத்த பூண்டி என்ற பகுதியில் வசித்து வரும் ஜெயபால் அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா. இவர் தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் பிரதமரைப் பற்றி அவதூறு இமெயிலை அவரது தந்தையின் மெயில் ID யிலிருந்து அனுப்பியதாக கூறப்படும் நிலையில் , மார்ச் 15-ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் விக்டரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது . வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வீட்டிலிருந்தவர்களை வெளியில் அனுப்பிவிட்டு விக்டரிடம் விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது . பிறகு அவரை அதிகாரிகள் அழைத்து சென்றதாக கூறிய அவருடைய பெற்றோர்;
“விசாரணைக்கு பிறகு ஒரு தகவலும் கூறாமல் எங்கள் மகனை அழைத்து சென்று விட்டனர். ஏன் அழைத்து செல்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் ஏதும் அதிகாரிகள் கூறவில்லை. என்னுடைய மகனை நாங்கள் கேட்ட போது , நான் எந்தத் தவறும் செய்யவில்லை அம்மா பயப்படவேண்டாம் என்று மட்டும் கூறிவிட்டு அவர்களுடன் சென்றான்.
என் மகன் தவறு செய்யவில்லை அவனை மீட்டு தாருங்கள் என கோரிக்கை விடுத்ததோடு, தவறே செய்யாத என் மகனை அழைத்து சென்றுள்ளனர் என்று குற்றச்சாட்டும் வைத்தனர்.
இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .