இராணுவத்தினரால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்திற்கு வீடுகள் நிர்மாணிப்பு
அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகளின் சாவிகள் கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 64வது காலாட் படைப் பிரிவின் 643வது காலாட் பிரிகேடின் படையினரால் முட்டியங்காட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த திருமதி ஜே. அன்டோனிதாஸின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
8வது இலங்கை பீரங்கி படையினர் தங்களுடைய தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறன்கள் மற்றும் தேவையான மனிதவளத்தைப் பயன்படுத்தி வீட்டை நிர்மாணித்துள்ளனர், அதே நேரத்தில் 643வது காலாட் பிரிகேடின் தளபதி கேணல் சந்தன விக்கிரமநாயக்க அவர்கள் நாட்டிலுள்ள தனது தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் நண்பர்களின் மூலம் மூலப்பொருட்களுக்கு தேவையான செலவினங்களை திரட்டினார்.
இதேவேளை, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-J) 51வது காலாட்படை பிரிவின் 511வது படையணியானது தமது தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்துடன் 9வது இலங்கை இலகு காலாட்படையுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் கீரமலை பகுதியைச் சேர்ந்த திரு.ஆறுமுகத்தின் சந்திர சேகரம் இல்லத்தை புனரமைத்ததாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு தேவையான நிதி அனுசரணையை திரு. விஷ் நடராஜ் அவர்கள் வழங்கியுள்ளதாக செய்திகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.