சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் போர் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர்கள் சந்திப்பு
ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் இதற்கு மந்தமான வரவேற்பை அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
@telegraph
ரஷ்யாவிற்கு உக்ரைனுடனான போரில் ஆயுதம் வழங்குவதாக மேற்கத்திய நாடுகள் சீனாவை ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, சீன அதிபர் ஜியின் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். அவர் வரும் திங்கள் கிழமை புடினுடன் மதிய உணவு சாப்பிட உள்ளார், அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமைதியை விரும்பும் சீனா
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், உக்ரைனில் நடக்கும் போரில் சீனா “ஒரு புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டை நிலைநிறுத்தும்“ என்றும் “அமைதிக்கான பேச்சுக்களை ஊக்குவிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கும்” எனவும் கூறியுள்ளார்.
@gettyimages
சீனத் தலைவர் ரஷ்யாவுக்குச் செல்கிறார் என்ற உண்மை, மாஸ்கோவிற்கு சீனாவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்துவதை குறிக்கிறது.
உக்ரைனுக்கு இறையாண்மையை மீட்டெடுப்பதில் சீனா உண்மையான பங்கு வகிப்பது வரவேற்கத்தக்கது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.