குறைந்துள்ள தங்கம் மற்றும் டொலரின் பெறுமதி! மக்கள் உணரத் தொடங்கியுள்ள மாற்றம்


தற்போது, பொருட்களின் விலைகள் குறைந்து செல்கின்றன. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பயப்படவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எமது கட்சிக்குத்தான். 2018 இல் தேர்தலில் அதிக சபைகளைக்

கைப்பற்றியதும் நாங்கள்தான்.

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை

குறைந்துள்ள தங்கம் மற்றும் டொலரின் பெறுமதி! மக்கள் உணரத் தொடங்கியுள்ள மாற்றம் | Sri Lanka Gold Price And Dollar Rate

ரணில் விக்ரமசிங்க பிரதமரான போதும் சரி, ஜனாதிபதியான போதும் சரி, எதிர்க்கட்சிகளை இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்தும் அழைப்பு விடுகின்றார். சிலர் அந்த அழைப்பையேற்று அரசுடன் இணைந்தனர். சிலர் அரசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அதை இல்லாமலாக்க இடமளிக்க முடியாது. பொருட்களின் விலைகள் குறைந்து செல்கின்றன. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் அஞ்சவில்லை. தேர்தலை நடத்தாமல் விட்டால் அதிக பாதிப்பு எங்களது கட்சிக்கே ஏற்படும்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தாமல் இருப்பதிலும் எங்களுக்கே நட்டம். அதிகமான முதலமைச்சர்களும் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அவர்களை நாம் இழந்துள்ளோம். எல்லோரும் இப்போது வீட்டிலே இருப்பதாக தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.