அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின், அதிமுகவின் ஒற்றை தலைமையாக, அக்கட்சியின் இடைக்கால பொய்துசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை முன்னெடுத்து உள்ளார்.
அதிமுகவின் பல்வேறு சிக்கல்களுக்கு 80 சதவிகிதம் தீர்வு கிடைத்துள்ளதால், தற்போது இபிஸ் தலைமையை ஏற்று பல்வேறு காட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
கடந்த வாரம் அண்ணாமலை மீதுள்ள அதிருப்தியின் காரணமாக பாஜகவில் இருந்து நிர்மல் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் விலகி, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை நிலைய செயலாளர் கே.கே. உமாதேவன் மற்றும் செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளருமான கோமல் ஆர்.கே அன்பரசன், மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று, எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. கே.கே.சிவசாமி, Ex. M.L.A., தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டுள்ளார்.