முதன்முறையாக காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சிஎன்ஜி என்ஜின் பெற்ற மாருதி சுசூகி பிரெஸ்ஸா விலை ₹ 9.14 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹ 12.05 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமேட்டிக் மாடல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி வேரியண்டுகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கின்றது. அடுத்தப்படியாக, டூயல் டோன் கொண்ட சிஎன்ஜி கார்களும் கிடைக்கின்றது.
மாருதி சுசூகி பிரெஸ்ஸா சிஎன்ஜி
எர்டிகா மற்றும் XL6 கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே K15C 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்படும், சிஎன்ஜி முறையில் 88 ஹெச்பி மற்றும் 122 என்எம் டார்க் வெளிப்படுத்தும். பெட்ரோல் எஞ்சின் 100 ஹெச்பி மற்றும் 136 என்எம் டார்க்கை வழங்கி வருகின்றது. பிரெஸ்ஸா சிஎன்ஜி 25.51 கிமீ ஒரு கிலோ எரிபொருளுக்கு வழங்கும்.
டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் XUV300 ஆகியவற்றை எதிர்கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் போட்டியாளர்களிடம் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை.
CNG வகை என்ஜின் LXI, VXI, ZXI என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கும். இதில் டூயல் பெற்ற டாப் வேரியண்ட் ZXI யை விட ரூ.16,000 கூடுதலாக விலை அமைந்துள்ளது.
கேபினின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் எந்த மாற்றமும் இல்லை. சிஎன்ஜி டேங் பொருத்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் வேரியண்டுடன் ஒப்பிடும்போது பூட் ஸ்பேஸ் குறைந்துள்ளது.
டாப் ZXi வகையில் SmartPlay Pro+ அமைப்புடன் கூடிய 7.0-இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களை பெறுகிறது.
Maruti Suzuki Brezza CNG Price:
Variant | Price |
---|---|
LXi S-CNG | Rs. 9.14 Lakhs |
VXi S-CNG | Rs. 10.49 Lakhs |
ZXi S-CNG | Rs. 11.89 Lakhs |
ZXi S-CNG Dual Tone | Rs. 12.05 Lakhs |