ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கைது வாரன்ட்| Arrest warrant against Russian President Putin

மாஸ்கோ-உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ‘வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த சண்டையின்போது, உக்ரைனில் இருந்த பல குழந்தைகளை ரஷ்ய அதிபர் புடின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புகார் எழுந்தது.

இது குறித்த விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, புடினுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய போர்க்குற்றத்திற்கு, ரஷ்ய அதிபர் புடின் உட்பட போரில் பங்கேற்ற அந்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பொறுப்பாகின்றனர்.

இந்த குற்றத்துக்காக புடின் மற்றும் ரஷ்ய நாட்டு குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா பெலோவா ஆகியோருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.