செகந்திராபாத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம்

செகந்திராபாத் நகரில் 40 ஆண்டுகள் பழமையான ஸ்னப்ன லோக் வணிக வளாகம் உள்ளது. நகரின் மையப்பகுதியில் இந்த வணிக வளாகம் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென இந்த வணிக வளாகத்தின் 8- வது மாடியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இது மளமளவென 7, 6, 5 ஆகிய மாடிகளுக்குப் பரவியது. பலர் மாடிப்படிகள்வழியாக இறங்கி உயிர்தப்பினர். 8 -வது மாடியில் உள்ளஒரு தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண் டிருந்த 13 பேர் கட்டிடத்தை விட்டுவெளியேற முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர். இதற்குள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் 8-வது மாடியில் சிக்கியவர்களைக் காப்பாற்றி காந்தி அரசு மருத்துவமனை மற்றும் யசோதா, அப்பல்லோ மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்தி, பிரமீளா, ஸ்ராவனி, வெண்ணிலா, திரிவேணி மற்றும் சிவா ஆகிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இறந்தவர்களில் 5 பேர் பெண்கள்.

சம்பவ இடத்திற்கு தெலங் கானா அமைச்சர்கள் முகமது அலி, தலசானி நிவாஸ் யாதவ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இறந்தவர் களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.