சென்னை: சென்னையில் உள்ள பழம்பெரும் ஸ்டேடியமான எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், புத்தாக்கம் செய்யப்பட்டு, புதிய கேலரிகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு ‘கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயரையும் சூட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானம் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகள் புதிதாக அமைக்கப் பட்டன. ஆனால் இந்த 3 கேலரிகளும் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டது. […]