உக்ரேனிய குழந்தைகள் சட்டவிரோதமாக நாடு கடத்தபட்டது உள்ளிட்ட போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக நெதர்லாந்திலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரை னின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவிற்கு சட்டவிரோதமாக குழந்தைகள் உள்பட அனைத்து மக்களையும் நாடுகடத்திய போர்க்குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் ஆகியோருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.