Chinmayi: உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசிய சின்மயி: வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்பவர் சின்மயி. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பகிருவார். இந்நிலையில் உடலுறவு சின்மயி வெளிப்படையாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி சின்மயி அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். தனது கருத்துகளுக்கு எதிராக பல விமர்சனங்களையும் எதிர்கொள்வார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் போது சில தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முதல் முறை உடலுறவு கொள்ளும் போது பெண்ணுக்கு ரத்த போக்கு ஏற்பட்டால் ஆண்கள் அதனை கொண்டாடுவார்கள். அந்த பெண் கன்னித்தன்மை உடையவள் என நினைத்து கொள்கிறார்கள். ஆனால் ரத்தப்போக்கு மட்டிமே ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்பதை குறிக்காது. இதில் வேறு பல விஷயங்களும் அடங்கியுள்ளது. இதுக்குறித்து விழிப்புண்ர்வு அடைய ஆண், பெண் இரு தரப்புமே சரியான பாலியல் கல்வியை நாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Parthiban: பார்த்திபனை பழி தீர்க்க இப்படி செய்தாரா ‘லவ் டுடே’ பிரதீப்.?: வெளியான பரபரப்பு தகவல்.!

மேலும் இவற்றை ஒருபோதும் ஆபாச படங்களில் இருந்து பாலியல் சார்ந்த விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவை தவறான கருத்துக்களை கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். பாலியல் கல்வியை ஆண், பெண் இருவரும் திருமணத்திற்கு முன்பே கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சின்மயி பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.