தமிழகத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்ததற்கு பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்
ஜவுளி துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளித்த நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடியின் நேற்று வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.
இதன் மூலம் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும் ,14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஜவுளி பூங்க அமைக்க விருதுநகரை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.