சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருங்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முகலிவாக்கம், கோடம்பாக்கம், சென்னை விமான நிலையத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ., தரமணி, கொடைக்கானலில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.