நாகர்கோவில்: 7 நாள் பயணமாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நேற்று கேரளா வந்த நிலையில், இன்று காலை கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை கவர்னர் ஆர்என்ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் வரவேற்றார். 6 நாள் பயணமாக 15ந்தேதி அன்று கேரளா வந்த திரவுபதி முர்மு, 2 நாட்கள் அங்கு பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். தற்போது திருவனந்தபுரத்தில் தங்கி இருக்கும் அவர், இன்று ஒருநாள் பயணமாக குமரிக்கு வருகை தந்தார். […]