தேனி: அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சொந்த ஊரான தேனி ஜெயமங்கலத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் மேஜர் ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.