மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் 3 மாத குழந்தையை கடத்தியவர்களை போலீஸ் கைது செய்தது. திண்டுக்கல்லைச் சேர்ந்த ஹரிஷ் குமார் – பாத்திமா தம்பதி மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தபோது குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த தம்பதி 3 மாத குழந்தையுடன் நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்தனர். நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தையை மர்மநபர்கள் தூக்கிச் சென்றதை கண்டு தம்பதி கூச்சலிட்டுள்ளனர்.