சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என செய்தியளார்களை சந்தித்த ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தனர். பிக்பாக்கெட் அடிப்பதுபோல பொதுச்செயலாளர் பதவியை பெற எடப்பாடி நினனைக்கிறார் என ஓபிஎஸ் கூறினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது சரிதான் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். அதன் தொடர் நடவடிக்கையாக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் சட்டதிட்ட விதி (20), […]