உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 தற்போது 72,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. மேலும் HDFC வங்கி பயனர்கள் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் இந்த போன் 68,999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும்.
அதாவது தற்போது விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13 மாடலை விட 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 விலை குறைவாக கிடைத்தாலும் ஐபோன் 14 வெறும் 8 ஆயிரம் ரூபாய் அதிகம் உள்ளது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 பொறுத்தவரை இரண்டிலும் Action Mode மட்டுமே உள்ளது. மேலும் 4K Cinematic Mode மூலமாக ரெகார்ட் செய்யலாம். இதில் A15 Bionic சிப் வசதி உள்ளது.
Apple iphone 13 Price
ஐபோன் 13 இந்தியாவில் 62,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதனை Flipkart மூலமாக நாம் வாங்கலாம். இதை HDFC பயனர்கள் 2000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உடன் 60,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும்.
Apple iPhone 14 Price
இந்த போன் இப்போது 72,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் HDFC பயனர்களுக்கு 4000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் 68,999 ஆயிரம் ரூபாய்க்கு இதனை வாங்கலாம். ஐபோன் 13 போனை விட வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாக ஐபோன் 14 விற்கப்படுகிறது. இவை இரண்டிலும் சிறந்த தேர்வாக நமக்கு ஐபோன் 14 இருக்கும். ஏனென்றால் நமக்கு 8000 ஆயிரம் ரூபாய் அதிக விலையில் கூடுதலாக ஒரு ஆண்டுகள் OS அப்டேட் வசதி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்