இலங்கை அணிக்கு எதிராக 215 ஓட்டங்கள்! இமாலய சாதனை படைத்த வீரர்..அனல் பறக்கும் டெஸ்ட்



வெல்லிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசி மிரட்டல் சாதனை படைத்தார்.

வெல்லிங்டன் டெஸ்ட்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது.

முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் லாதம் 21 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் கான்வே – கேன் வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அரைசதம் கடந்த கான்வே 78 ஓட்டங்களில் தனஞ்செய டி சில்வா ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன் சாதனை சதம்

பின்னர் வில்லியம்சனுடன் கைகோர்த்த நிக்கோல்ஸ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரிகளை விரட்டிய வில்லியம்சன், டெஸ்டில் தனது 6வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

மேலும் இது அவருக்கு 28வது சதம் ஆகும். இதன்மூலம் 8000 ஓட்டங்களை கடந்த அவர், டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனையை அவர் படைத்தார்.

முன்னதாக ராஸ் டெய்லர் 7,683 ஓட்டங்கள் குவித்து முதலில் இடத்தில் இருந்தார். அவரை 8124 ஓட்டங்கள் குவித்து வில்லியம்சன் பின்னுக்கு தள்ளினார்.

மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் 215 ஓட்டங்களில் பிரபத் ஜெயசூர்யா பந்துவீச்சில் வெளியேறினார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 23 பவுண்டரிகள் அடங்கும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.