தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கு நடிப்பே வராது என்று கேலி பேசிய கோலிவுட் உலகம் சூர்யாவை இன்று தலையில் வைத்து கொண்டாடுகிறது. அந்தளவுக்கு தனது கடின உழைப்பால் வளர்ந்துள்ளார் சூர்யா. நந்தா, மவுனம் பேசியதே, பிதாமகன், பேரழகன், கஜினி, அயன், மாயாவி போன்ற படங்கள் சூர்யாவின் நடிப்பு திறமையை வெளிக் கொண்டுவந்தது.
Chandini Tamilarasan: ப்பா… உச்சக்கட்ட கவர்ச்சி… புடவையில் ஹாட்னஸ் காட்டும் சாந்தினி!
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா, சூரரை போற்று படத்திற்காக தேசிய விருதை பெற்றார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ள சூர்யா, தனது 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கப்படாத நிலையில் சூர்யா 42 என குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 500 கோடி ரூபாய் பிஸ்னஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கிக்கொண்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலானார்.
Ajith: ரகசிய கள்ளத்தொடர்பில் அஜித்.. குண்டைத் தூக்கிப்போட்ட பிரபலம்.. கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!
இந்நிலையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் நடிகர் சூர்யா சொகுசு பிளாட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை 68 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த பிளாட் 9,000 சதுர அடியில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதில் கார்டன் மற்றும்பல கார்கள் பார்க்கிங் செய்யும் வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகள் பர்த்டே பார்ட்டி, விசேஷங்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றை செல்லபிரேட் செய்வதற்காகவே சூர்யா இந்த பிளாட்டை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?
நடிகர் சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். இதனை தொடர்ந்து சில பிஸ்னஸ்களிலும் நடிகர் சூர்யா முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் நல்ல லாபம் கிடைத்ததை தொடர்ந்து அங்கேயே செட்டிலான சூர்யா சொத்துக்களையும் வாங்கி குவிக்க தொடங்கிவிட்டார். நடிகை ஜோதிகாவின் வற்புறுத்தலின் பெயரில்தான் நடிகர் சூர்யா மும்பை சென்றதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.