சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குஜராத் சென்றுள்ள மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் அமித் ஷா, காந்திநகரில் நடைபெற்ற 49-வது பால் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 1970 முதல் 2022 வரை இந்தியாவின் மக்கள்தொகை 4 மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் பால் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டின் பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு சுமார் 126 மில்லியன் லிட்டராக உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது அதிக அளவாகும். நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் அல்லாமல் கார்ப்பரேட்டிவ் பால் பண்ணை, ஏழை விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆத்மநிர்பர் ஆக உதவுகிறது. பால் துறை இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். பால் துறையின் பங்களிப்பு ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 45 கோடி மக்கள் அதனுடன் தொடர்புடையவர்கள், என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM