விருதுநகரில் அமையவில்லை மெகா ஜவுளி பூங்கா 4445 கோடி செலவில் அமைக்கப்படும் 7 டெக்ஸ்டைல் மெகா பூங்காக்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு
தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4445 கோடி செலவில் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை முன்னெடுக்கும் நோக்கில் PM MITRA Parks செயல்படுத்தப்படுகிறது.முன்மொழியப்பட்ட பூங்காக்கள், ஜவுளித் தொழிலின் போட்டித்தன்மையை மேம்படுத்தி, பொருளாதாரத்தை அடைய உதவுவதோடு, இந்தியாவில் உற்பத்தி செய்ய உலகளாவியாஅளவில் ஈர்க்கப்படும், ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூங்காக்கள் மூலம் 70,000 கோடி முதலீடு மற்றும் 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா ஜவுளி பூங்கா அமைக்க தமிழகத்தில் , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கபுரம் கிராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் நேற்று நடைபெற நிகழ்ச்சியில் அறிவித்தார்.இந்த கிராமத்தில் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்கான 1,500 ஏக்கரை சிப்காட் (மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகம் தமிழ்நாடு லிமிடெட்) ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.தமிழகத்தை தொடர்ந்து , தெலுங்கானாவில் வாரங்கலில் உள்ள “காகடியா மெகா டெக்ஸ்டைல் பார்க்” இத்திட்டத்தின் கீழ் கூடுதல் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரங்கலில் 1,200 ஏக்கரில் அமைந்துள்ளது “காகடியா மெகா டெக்ஸ்டைல் பார்க்”. இங்கு குழந்தைகளுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் கேரளாவின் கிடெக்ஸ் குழுமம் போன்ற சில மார்க்யூ முதலீடுகளை ஈர்த்துள்ளது.
கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள ஃபிரோசாபாத், நடிசின்னூர் மற்றும் கிரணகி கிராமங்களில் 1550 ஏக்கர் நிலத்தை இத்திட்டத்திற்காக அம்மாநில அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.மகாராஷ்டிராவில் பிரதமர் மித்ரா திட்டத்தின் , கீழ் அமராவதி மற்றும் ஔரங்காபாத்ஆகிய இடங்களில் பிரவுன்ஃபீல்ட் பூங்காவை உருவாக்க மகாராஷ்டிரா அரசு பரிந்துரைத்தது. நாட்டின் ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தியில் 28 சதவீதத்தை உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா, வளர்ச்சியடையாத விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் ஜவுளி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் 42 லட்சம் ஹெக்டேர் நிலம் பருத்தி விவசாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் 40 முதல் 45 லட்சம் விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக , குஜராத்தின் நவ்சாரியில் மெகா ஜவுளிப் பூங்காவைக் கட்ட குஜராத் அரசு முன்மொழிகிறது. இத்திட்டத்திற்காக 2,383 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு கையகப்படுத்துகிறது.
இந்த மெகா பூங்காவின் மொத்த பரப்பளவில், 50% உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், 20% பயன்பாடுகள் அமைக்கவும், 10% நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 5% பரப்பளவு தளவாடங்களை நிறுவவும் பயன்படுத்தப்படும் மற்றும் 10% பகுதி குடியிருப்பு வீடுகளுக்கு ஒதுக்கப்படும் அதேசமயம் 5% ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்காக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தில் தார் பதியிலும் , உத்தரபிரதேசத்தில் லக்னோ மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் 1000 ஏக்கர் பரப்பளவில் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடை பூங்கா அமைக்க அம்மாநில அரசு நிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
டெக்ஸ்டைல் மெகா பூங்காக்கள் அமைக்க , 13 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட PM MITRA பூங்காக்களுக்கான 18 திட்டங்களில் ஏழு இடங்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.இவை அனைத்தும் , தகுதியான மாநிலங்கள் மற்றும் தளங்கள் இணைப்பு, தற்போதுள்ள சுற்றுச்சூழல், ஜவுளி/தொழில் கொள்கை, உள்கட்டமைப்பு, பயன்பாட்டு சேவைகள் போன்றவை அடிப்படையில் ‘சவால் முறை’யைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்படுள்ளது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதை ஜவுளி அமைச்சகம் மேற்பார்வையிடும் மேலும் வளர்ச்சி மூலதன உதவி வடிவில் தலா ஒரு பூங்காவிற்கு 500 கோடி வழங்கப்படும்.பிஎம் மித்ரா பூங்காவில் உள்ள யூனிட்டுகளுக்கு தலா ஒரு பூங்காவிற்கு 300 கோடி வரை பூங்கா விரைவாக செயல்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை PM MITRA பூங்காவிற்கு தேர்ந்தெடுத்ததற்காக முதல்வர் ஸ்டாலின் , பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எங்கள் SIPCOT க்கு 1052 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம்”என்று பதிவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM