தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அறிவிப்பு.
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சுதா சேஷையன் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு ஜனவரி முதல் வாரத்தில் அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் மூத்த மருத்துவர்கள் வசந்தி வித்யா சாகரன் , ராமச்சந்திரா மருத்துவமனையின் டெலி மெடிசன் துறை தலைவர் K.செல்வகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த குழு இரண்டரை மாதங்களுக்குப் பிறகு துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தோரில் இருந்து தகுதியான 3 பேரை தேர்வு செய்து இக்குழு ஆளுநரிடம் வழங்கும். அதிலிருந்து ஒருவரை ஆளுநர் தேர்வு செய்து துணை வேந்தராக நியமிப்பார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM