நெல்லை: நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பக்கம் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகள் கீதோரின் சுமைலா (20) என்பவர் விடுதியில் தங்கியிருந்து 4ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை விடுதி அறையில் கீதோரின் சுமைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
தகவலறிந்து சென்ற முன்னீர்பள்ளம் போலீசார், கீதோரின் சுமைலா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.