வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாக, சென்னையில் காவல் ஆணையரை சந்தித்தபின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
மேலும், காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன்; இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுத்துள்ளது” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடக்க உள்ளநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தை சிலர் தக்க உள்ளதாக தகவல் வந்துள்ளதாக கூறி ஜெயக்குமார் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
மேலும், அதேபோல் ஒரு சம்பவம் அரங்கேறாமல் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாளை இந்த பொதுச்செயலாளர் தேர்தல் தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. மேலும் நாளையே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.