சிறு வயதில் தனக்கு குர்ஆன் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை தற்போது அவர் வீட்டுக்கே வந்து சந்தித்து நலம் விசாரித்துள்ளார், மலேசியா நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா.
45 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் தனக்கு குர்ஆன் சொல்லிக் கொடுத்து தற்போது பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள ஆசிரியர் அப்துல் லத்தீப் அவர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், மலேசிய நாட்டின் சரவாக் மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா.
மலேசிய நாட்டில் சரவாக் மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர் ஆவான் டெங்கா (65). 45 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இவருக்கு அப்துல் லத்தீப் என்பவர் குர்ஆன் சொல்லிக் கொடுத்துள்ளார். 90 வயதான அப்துல் லத்தீப் தற்போது பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள கீழ தெருவில் வசித்து வருகிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு குர்ஆன் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்ற நோக்கில், மலேசியாவை சேர்ந்த சரவாக் மாநில துணை முதல்வராக இருக்கும் ஆவான் டெங்கா, தனது மனைவி மற்றும் குடும்பத்தினர்களுடன் இன்று பாபநாசம் அருகே ராஜகிரியில் வசிக்கும் அப்துல் லத்தீப்’பை சந்தித்து மகிழ்ந்தார்.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆவான் டெங்கா, 1968ஆம் ஆண்டு அப்துல் லத்தீப் எனது செகண்டரி ஸ்கூல் டீச்சராக பணிபுரிந்தார். எப்போதும் சுறுசுறுப்பாகவும், நல்ல ஆசிரியராகவும் இருந்தார். அப்போதைய காலகட்டத்தில் இவர் எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளார். நான் இவரை தமிழகத்தில் வந்து சந்திப்பது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்னாலும் இரண்டு மூன்று முறை வந்திருக்கிறேன். ஆசிரியர் அப்துல் லத்தீப் மீது நிறைய மரியாதை இருக்கிறது. அவர் நன்றாக இருக்க வேண்டும். இந்த சந்திப்பு தனக்கு பெரு மகிழ்ச்சி அளித்திருப்பதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM