தனுஷின் ‛வாத்தி' படத்தின் மொத்த வசூல்
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் 100 கோடி வசூல் செய்த நிலையில் அதையடுத்து தமிழ், தெலுங்கில் வெளியான வாத்தி படமும் 100 கோடி வசூலை எட்டியது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் வாத்தி படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் இப்படம் 118 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போது ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ள வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களின் அடுத்தடுத்த வெற்றி காரணமாக தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்கான எதிர்பார்ப்பும், வியாபாரமும் அதிகரித்துள்ளது.